.

.

Slidershow

கறவைப் பசுக்களில் மடிநோய்



எப்படி ஏற்படுகிறது

  • மடி காம்பு தூவரங்களின் வழியாக நோய் கிருமிகள் மடிக்குள்ளே சென்று நோயினை ஏற்படுத்துகிறது.
எந்த மாடுகளுக்கு எப்போது எல்லாம் ஏற்படுகிறது

  • பசுக்கள் அதிகமாக பால் கறக்கும் காலங்களில் ,  பால் கறக்க நேரம் அதிகமாவதும் அதிக பால் கறக்கும் போது மடிக் காம்பு தூவரங்கள் பெரிதாகவும் மாறுவதும் முக்கிய காரணிகள் ஆகும்.


எப்படி கண்டறிவது

  • பால் நிறம் மாறி அல்லது திரிந்து அல்லது நீர்த்து காணப்படும். 
  • கீழேயுள்ள படத்தில் உள்ளவாறு பால் மடி ஒரு பக்கம் வீங்கி காணப்படும்.
  • கையினால் மடியினை பிடித்து பார்க்கும்போது கட்டியாக இருக்கும். சந்தேகம் இருப்பின் மற்ற பாகத்தில் அதாவது வீங்காத பாகத்தில் பார்த்தால் தெளிவாக தெரியும்.
  • சில கிருமிகளின் தொற்று மிகவும் ஆபத்தானது.அக்கிருமிகளின் தொற்று மடி நோய் 2-4 மணி நேரத்தில் ஏற்படும். மாடுகள் தீனி உண்ணாமல், காய்ச்சலுடன் காணப்படும். மடி அதிகமாக வீங்கியும் சூடாகவும் இருக்கும். பாதிக்கப்பட்ட காம்பில் பால் கறந்து பார்த்தால் அதில் சிறுநீர் நிறத்தில் திரவம் வெளிவரும். 
மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள்

34 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்

திரு. பெலிக்ஸ்,கடையம், திருநெல்வேலி - மென்பொருள்  பொறியாளரின் சாதனை -

அலைபேசி   ::  740 - 200- 7489




தீவனப் பயிர்கள் விதை நேர்த்தி


  • வேலிமசால், முயல்மசால் மற்றும் சூபாபுல் விதைகளை 80 செ.கி. வெந்நீரில் 5 நிமிடம் இட்டு பின்னர் விதைப்பு செய்தால் முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும்.
  • புதிய கொழுக்கட்டைப் புல் விதைகள் விதை உறக்கத்தில் இருப்பதால் விதைகளை 1 % பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 2 நாட்களுக்கு ஊற வைத்து பின் விதைக்கவும்

பசுந்தீவனமளிக்கும் முறை


  • கறவை மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 15-25 கிலோ பசுந்தீவனம் அளிக்கலாம். அதில் மூன்றில் இரண்டு பங்கு தானிய மற்றும் புல்வகை பசுந்தீவனமாகவும் மீதமுள்ள ஒரு பங்கு பயறு வகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.

  • பசுந்தீவங்களை 2 அங்குல அளவிற்கு துண்டுகளாக நறுக்கிப் போடுவது சிறந்தது. துண்டுகளின் அளவு 2 அங்குலத்திற்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும்

தீவனப் பயிர்கள் - மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகைகள்

களர் மற்றும் உவர் நிலம்

  • கினியா புல்
  • வேலி மசால்
  • நீர்ப்புல்
  • தட்டைப் பயறு
அமில நிலம்
  • முயல் மசால்
  • தட்டைப் பயறு
  • கினியாப் புல்
தரிசு நிலம் மற்றும் வரப்பு ஒரங்கள்

  • சூபாபுல்
  • அகத்தி
  • கிளைரிசிடியா
தண்ணீர் தேங்கிய நிலம்

  • நீர்ப் புல்
நிழலில் வளரக்கூடியவை

  • கினியாப் புல்
  • டெஸ்மோடியம்

தீவன தட்டை பயிறு - Fodder Cowpea


  • புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர்
  • 30 - 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.
  • இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.
  • உலர் தீவனம் தயாரிக்க உகந்தது.
  • ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது

வெறிநாய் கடி நோய்


  • இது ஒரு வைரஸ் நோயாகும்.
  • இது வெறிநாய் நோய் தாக்கிய நாய் கடிப்பதன் மூலம் மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவக்கூடியது.
  • நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியதால், இந்த நோய் அறிகுறி தெரிந்த பிறகு குணப்படுத்த முடிவதில்லை.

வெறிநாயை கண்டிபிடிப்பது எப்படி?

  • தனியாக இலக்கு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
  • வாயிலிருந்து எச்சில் ஒழுது கொண்டிருக்கும்.

மற்ற நாய் கடியிலிருந்து எப்படி வேறு படுத்துவது?

  • இது தனியாக அலைய கூடியது.
  • சின்ன கன்று குட்டிகளை பொதுவாக பின்புற பகுதிகளிலும் பெரிய மாடு எருமைகளை முன்புற முகத்திலோ அல்லது அதன் அருகிலோ கடி இருக்கும்.
  • குழுவாக வந்து நாய்கள் கடித்தால் அது வெறிநாயாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
கடிப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மருத்துவம்

  • உடனே கடிப்பட்ட இடத்தை நல்ல கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
  • பிறகு அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பு மருந்துகளை குறிப்பிடும் 5 தடவை தவறாமல் போட்டு கொள்ளவேண்டும்.
வெறிநாய் கடி நோய் வராமல் தடுப்பது எப்படி?

  • வீட்டில் வளர்க்கும் பசு, எருமை , வெள்ளாடு , செம்மறியாடு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முதல் 3 மாத வயதில் வெறிநாய் கடி நோய் தடுப்பு மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.
  • இந்த தடுப்பு மருந்தினை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை திரும்ப திரும்ப போட்டு கொள்ளவேண்டும்.

நேரடி பால் சேகரிப்பு



  • சிறிய வண்டி மூலம் பண்ணைக்கு  நேரடியாக சென்று பால் சேகரிப்பு.
  • மின்னணு எடை தராசு கொண்டு பாலை எடை போடுதல்
  • பாலின் கொழுப்பு உடனை கண்டறிதல்.
  • இதனால் பண்ணையாளர்களுக்கு கொள்முதல் நிலையங்களுக்கு பாலை கொண்டு செல்லும் வேலை குறைகிறது. மேலும் பாலுக்கு துல்லியமான எடை மற்றும் விலை கிடைக்கிறது.





எருமை கன்றுகளுக்கு குடற்புழுநீக்கம்


  • எருமை கன்றுகளுக்கு தாயின் கருப்பறையில் இருக்கும் போதே தாயிடம் இருந்து உருளை புழு தொற்று ஏற்படுகிறது.
  • குடற்புழுநீக்கம் செய்யாத கன்றுகளில் வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும். 
  • இவ்வகை புழு தாக்கம் உள்ள கன்றுகள் எதிர்ப்பு சக்தி குறைந்ததாகவும், பருவமடைதல் மிகவும் தாமதமாகவும் இருக்கும்.
  • இக்கன்றுகளை பிறந்த ஒரு வாரத்தில் கட்டாயமாக  குடற்புழுநீக்கம் செய்யவேண்டும்.
  • அருகில் உள்ள கால்நடை மருந்தக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று தகுந்த குடற்புழுநீக்க மருந்தினை அளித்திடவேண்டும்.
  • மேலும் விபரங்களுக்கு இந்த இணையத்தளத்தில் உள்ள கால்நடை மருத்துவர்களை அழைத்து ஆலோசனை பெறலாம்.

பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter)



  • பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சிறு சிறு துண்டுகளாக ( 1” அளவிற்கு) நறுக்க உதவும் கருவியே பசுந்தீவன நறுக்கி (Chaff Cutter).
  • நறுக்கும்போது சுவை கூடுவதால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகமாகிறது.
  • செரிமானத் தன்மை அதிகரிப்பதால் அதிக சக்தி கால்நடைகளுக்கு கிடைக்கிறது.இதனால் பால் உற்பத்தி கூடுகிறது.
  • 20-30% தீவன சேதாரம் குறைகிறது. இதனால் சாதாரணமாக 3 கால்நடைகளுக்கு அளிக்கும்  பசுந்தீவனத்தை, நறுக்கி போடும்போது 4 கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
  • சேதாரம் குறைவதால் கட்டுத் தரையை சுத்தம் செய்யும் வேலை குறைகிறது.
  • கட்டுத்தரையை சுத்தம் செய்ய ஆகும் நேரத்தில் பாதி நேரம் செலவிட்டால் போதும் நறுக்கி போட்டு விடலாம்.
  • சிறு பண்ணையாளர்கள் கையால் நறுக்கும் கருவியை பயன்படுத்தலாம்.


கறவை மாடுகளில் மடி நோய் Mastitis in Cow



 மடி நோயினால் அதிகமான வருவாய் இழப்பு எப்படி ?
  • பால் பண்ணைகளில் அதிக வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடிய காரணிகள் மடி நோய் மிக முக்கியமானதாகும்.
  • மடி நோயின் போது மருத்துவ செலவு மற்றும்  பால் உற்த்தி இழப்பு போன்றவற்றால் மொத்தமாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை வருமான இழப்பு ஏற்படுகிறது.
மடி நோய் என்பது என்ன?
  • மடி நோய் என்பது கிருமிகள் காம்பின் துளை வழியாக உள்ளே சென்று மடியின் பால் சுறக்கும் திசுவில் நோயை உண்டாக்குகிறது.
  • கிருமிகள் உள்ளே நுழைய பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை
  1. அதிகம் பால் கறக்கும் பசுக்களின் காம்பு துளைகள் பொதுவாக பெரிதாக இருக்கும். அத்துளைகள் பால் கறந்த உடனே மூடுக்கொள்ள தொடங்கும். இது சுமார் 5 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும். இக்கால கட்டத்தில் தான் கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. உள்ளே சிறுதளவு கிருமிகள் சென்றால் அதை பசுவின் நோய் எதிர்ப்பு சக்தி அழித்துவிடும். ஆனால் அசுத்தமான மற்றும் சேறான தரையில் வளர்ப்படும் பசுக்களில் உள்ளே செல்லும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும. இதை பசுவின் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்பட்டு நோயை உண்டாக்கும். 
  2. பசுவின் காம்பு துளை சில பசுக்களின் இயற்கையாகவே பெரிதாக இருக்கும்.
நோய் அறிகுறிகள்:

  •  முதல் கட்டத்தில் பால் நீர்த்தது போல் இருக்கும். இதை கண்டுபிடிப்பது சற்று கடினம். இதை மற்ற காம்பில் பால் கறந்து ஒப்பிட்டு கண்டுபிடிப்பது எளிது. இக்கட்டத்தில் பசுவிற்கு மருத்துவம் செய்தால் ரொம்ப நல்லது.
  • இரண்டாம் கட்டத்தில் ( அதவாது முதல் கட்டம் ஆரம்பித்து 3- 5 மணி நேரம் கழித்து ) பால் திரி திரியாகவும் கட்டி கட்டியாகவும் இருக்கும். மற்றும் அந்த பக்கத்து மடியானது வீங்கியும் , சூடாகவும் , கெட்டியாகவும் இருக்கும்.
  • மூன்றாம் கட்டத்தில் பால் வெள்ளையாக இல்லாமல் தண்ணீர் போல மங்கலான நிறத்தில் இருக்கும்.
  • சில கிருமிகளால் ஏற்படும் மடிநோயானது ரொம்ப ஆபத்தானது. அதை கண்டுபிடிப்பது எளிது. நோய் தாக்கிய 2-4 மணி நேரத்தில் ஒரு பக்க மடியானது அதிகமான வீக்கத்துடனும் பாலானது நிறம் மாறி கலங்கலான தண்ணீர் போல இருக்கும். பசு தீவனம் எடுக்காமல் காய்ச்சலுடன் காணப்படும். இந்த மாதிரி பசு நோய்வாய்படும் போது உடனே காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைக்கும் மருத்துவம் செய்யவேண்டும். இல்லையேன்றால் பல நேரங்களில் பசுக்களின் இறப்பு அதிகமாக இருக்கும்.
கண்டறிதல் :
  • மடி வீக்கமாகவோ அல்லது பால் நிறம் மாறியோ அல்லது நீர்த்து காணப்பட்டலோ உடனே கால்நடை மருத்துவரை ஆலோசிக்கவும்.
  • உடனே மருத்துவம் ஆரம்பிக்கவேண்டும். காலம் தாழ்த்துவதால் பாதிப்பு அதிகமாகுவது மட்டுமல்லாமல் சிகிச்சையால் சரியாவது காலம் தாமதமாகும்.
தடுப்பு முறைகள் :

  • பால் கறந்த 15 நிமிடங்களுக்கு பசுக்களுக்கு பசுந்தீவனம் அளித்தால் , கீழே படுப்பது குறைந்து கம்பின் துளைவழியாக கிருமிகள் உள்ளே செல்வது குறையும்.
  • பசுக்களுக்கு சரிவிகித தீவனம் மற்றும் தாது உப்புகள் சரியான அளவில் அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்காலம்.
  • பசுக்களின் கொட்டகைகளை சுத்தமாகவும் கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும்.

    ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

    • பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
    • முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
    • இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
    • தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
    • ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

    செய்முறை


    • மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
    • ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
    • அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
    • குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
    • தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
    • பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
    • ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
    • பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
    • ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
    • குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
    • மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
    • நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
    • இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
    • 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
    • ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.



    நாட்டுக் கோழி வளர்ப்பு

    • நாட்டுக் கோழி வளர்ப்பு - நாட்டு கோழிகள் என்பது புறக்கடையில் அதாவது வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சுற்றி திரிந்து கிடைக்கும் பூச்சி , புழு மற்றும் சிதறிய தானியங்கள் ஆகியவற்றை உண்டு வளர்ந்து வருபவை. இது பழங்காலத்தில் நம் முன்னோர்களால் வீட்டின் புரத தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.
    • பழங்கால முறைகளில் உள்ள குறைகளை களைந்து ஒரு சிறப்பான லாபகரமான முறையை பின்பற்றி நாட்டு கோழி வளர்ப்பில் நல்ல லாபம் அடையலாம்
    • நாட்டு கோழிகளில் குஞ்சுககளை பருந்து, காகம் மற்றும் கீரி போன்றவைகள் வேட்டையாடி இழப்புகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய குஞ்சுகள் பிறந்து ஒரு மாதம் வரை தாய்கோழியையும் குஞ்சுகளையும் வெளியே அதிகம் விடாமல் ஒரு சின்ன கொட்டகையே உருவாக்கி வளர்த்தலாம்.
    • நாட்டு கோழி வளர்ப்பில் தீவனம் சரியான அளவில் மற்றும் சரியான விகிதத்தில் கொடுக்கலாம். சோளம் , உடைந்த அரிசி மற்றும் கரையான்களை உற்பத்தி செய்து கொடுக்கலாம்.
    • புழு  மற்றும் பூச்சிகள் கிடைக்காத கோடை மாதங்களில் கோழிகளில் வளர்ச்சி குறைவு, முட்டைகள் குஞ்சு ப் பொரிக்கும் விகிதம் குறைவு மற்றும் பிறந்த குஞ்சுகளின் இறப்பு ஆகியவை காணப்படும். இவையனைத்தும் புரத சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஒரே சிறந்த மற்றும் எளிய முறை கரையான் உற்பத்தி மட்டுமே. இதை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
    • நாட்டு க் கோழி வளர்ப்பில் குடற்புழு நீக்கம் மற்றும் கோழிக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி தவறாமல் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்